ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு

02:52 PM Jan 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 17 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதில் 11 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 6 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவி பல் மருத்துவம் படிப்பைத் தேர்வு செய்துள்ளார்.

அதாவது, முதல் நாள் கலந்தாய்வில் கலந்துகொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இடமிருந்தும் பணம் கட்ட முடியாது என்று இடம் தேர்வு செய்யாமல் திரும்பிய மாணவர்கள், “தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை பணம் செலுத்தும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தெடர்ந்து, தமிழக அரசே பணம் செலுத்தும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை முன்பே செய்திருந்தால் நாங்களும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தேர்வு செய்திருப்போம்” என்று தங்கள் வருத்தங்களைத் தெரிவித்திருந்தனர். பல மாணவர்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

இந்த நிலையில்தான், 4ஆம் தேதி நடந்த இரண்டாவது கலந்தாய்வில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசுப் பள்ளி மாணவி நித்யா, எம்.பி.பி.எஸ். படிக்க சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார். அதேபோல சுப்பிரமணியபுரம் அரசுப் பள்ளி மாணவி நர்மதாவுக்கு தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களோடு சேர்த்து 17 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கீரமங்கலம் ‘நமது நண்பர்கள் பயிற்சி மையத்தில்’ இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT