BJP loses deposit in 22 wards

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில் 18வது வார்டு வேட்பாளர் மல்லிகா மட்டும் 428 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார். புதுக்கோட்டை நகராட்சியில், 18வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்லிகா மட்டுமே வைப்புத் தொகையை தக்க வைத்துள்ளார். மற்ற 22 பா.ஜ.க வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

Advertisment

வார்டு வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

1வது வார்டு கீதா - 6

2வது வார்டு சுதர்சன் - 53

3வது வார்டு வளர்மதி - 52

4வது வார்டு சுப்பிரமணியன் - 14

5வது வார்டு முருகேசன் -17

6வது வார்டு சசிகலா - 36

7வது வார்டு செல்வி - 54

8வது வார்டு சுகன்யா - 30

13வது வார்டு அமுதா - 34

15வது வார்டு காடுவெட்டி குமார் - 151

22வது வார்டு சீனிவாசன் - 48

23வது வார்டு மணிராஜன் - 33

24வது வார்டு சசிகலா - 25

26வது வார்டு கார்த்திகா - 57

27வது வார்டு நடராஜன் - 55

29வது வார்டு மதன்குமார் - 185

30வது வார்டு வனஜா - 30

31வது வார்டு தரணிகா - 11

33ஷாலினி - 25

38வது வார்டு சாந்தி - 72

40வது வார்டு ரவீந்திரன் - 11

41வது வார்டு ஆறுமுகம் - 79

23 வேட்பாளர்களில் 100 ஓட்டுகளுக்கு மேல் பெற்றவர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். 50 வாக்குகளுக்குள் பெற்ற பாஜக வேட்பாளர்களே அதிகமாக உள்ளனர்.

Advertisment