ADVERTISEMENT

'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தமிழகத்தில் நாளை முதல் அமல்!

03:34 PM Sep 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்தால் பிற மாநில ரேஷன் கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையைப் பதிவு செய்து, அரிசி, கோதுமை வாங்கலாம்; அதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியைப் போக்க, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) அமல்படுத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னை, திருச்சி, அரியலூர், நாகை, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை (01/10/2020) 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அக்டோபர் 16- ஆம் தேதி அமலாகிறது' என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி, நாளை 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை' தொடங்கி வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT