ADVERTISEMENT

“வாழ விடமாட்றாங்க.. அரிவாள் தூக்கிட்டு வெட்ட வராங்க..” - பெற்ற பிள்ளைகளால் ஆபத்தென கண்கலங்கும் மூதாட்டி!  

04:02 PM Nov 16, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.

நாகை மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த பா.கொந்தை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம்மாள். 80 வயதுடைய மாணிக்கம்மாளுக்கும், 90 வயதுடைய அவரது கணவர் சிங்காரவேலுவுக்கும்தான் அந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

வயதான கணவரோடு தள்ளாடியபடியே நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் வயதான பாட்டி மாணிக்கம்மாள். அந்தப் புகார் மனு குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, "தள்ளாடுற வயதில் நடக்கவே முடியாத என்னோட கணவருடன் கஷ்டப்பட்டுவருகிறேன். படுக்கையிலயே தன்னால நீர் கழிச்சிடுறாரு. எனக்கு நாலு பிள்ளைங்க. மூத்தவனும், இளையவனும் எங்களுக்கு உதவாட்டியும், தொந்தரவு செய்யுறது இல்ல. ஆனா இரண்டாவது மகனும், மூனாவது மகனும் பொண்டி, பிள்ளைங்க பேச்சக் கேட்டுக்கிட்டு அடிக்கிறானுங்க.

மூத்த மகன் துரைராஜ் வீட்டில் இருக்கிறோம். வீட்டுக்காரர் படுக்கையிலயே சிறுநீர், மலம் கழிச்சிடுறதால, மூத்த மகனின் வீட்டிலும் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. அதனால், என்னோட தந்தையின் அரவணைப்போடு முப்பத்தைந்து வருஷம் காலத்த ஓட்டினேன், அவரு உயில் மூலம் எனக்கு கொடுத்த இடத்துல, ஒய்வூதிய பணத்த வச்சி, குழுவுல கடன் வாங்கி, எனக்கு சொந்தமான இடத்திற்குச் சென்று பழுதடைந்த வீட்டினை சரி செய்யச் சென்றால் என்னையும், எனது கணவரையும் அடிக்கப் பாய்ந்து கொலை செய்ய வராங்க. அரிவாள் தூக்கிட்டு வெட்ட வராங்க, நடுமகன் பழநியும் அவரது குடும்பத்தினரும். மேலும், படாத கொடுமை செய்யுறாங்க.

நாலு பிள்ளைங்கள பெத்தோம், சாகப்போற காலத்துல கால் வயிற்று கஞ்சி ஊத்தாட்டியும் பரவாயில்ல. இருக்குறவரைக்கும் அவங்க எப்படியாவது வாழ்ந்துட்டு போகட்டும்னுகூட விடமாட்டேங்குறாங்க. இருக்க இடமில்லாமல் சாகப்போற காலத்துல தவிக்கிறோம். வயதான எங்களின் நிலமை அறிந்து பாதுகாப்பு தர வேண்டும்" என கண் கலங்குகிறார் மாணிக்கம்மாள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT