farmer passed away in Nagapattinam

Advertisment

திருக்குவளை அருகே கருகிய பயிரைக் காப்பாற்ற முடியாததால், கவலையில் பரிதவித்த விவசாயி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (47) விவசாயியான இவர் நடப்புப் பருவத்தில் அவரது வயலில்குறுவை சாகுபடி செய்திருந்தார். சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகி சருகாவதைக் கண்டு கவலையில் உறைந்த ராஜ்குமார்,வீட்டிலும், சக விவசாய நண்பர்களிடமும் நிலமையைக் கூறி புலம்பியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வயலுக்கு சென்றவர் காய்ந்தநெற்பயிர்களை டிராக்டர்களைக் கொண்டு அழித்துவிட்டு சம்பா சாகுபடிக்கான பணிகளையாவது துவங்கலாம் என முடிவெடுத்துமேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் வயலிலேயே மயக்கம் அடைந்த அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisment

திருக்குவளை அருகே கருகிய பயிரை காப்பாற்ற முடியாமல், கவலையில் இருந்து விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விவசாயி ராஜ்குமார் உயிரிழப்பு குறித்து, வேளாண்துறை, வருவாய்த்துறை, காவல்துறை விசாரணை செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.