ADVERTISEMENT

ஓபிஎஸ் மாவட்டத்தில்  காக்கிகள் கடை பிடிக்கும் புது பார்முலா!

07:14 PM Aug 27, 2018 | sakthivel.m

ADVERTISEMENT


துணை முதல்வரான ஓபிஎஸ் மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள காக்கிகள் புது பாணியை கடைபிடித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT


தேனி மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது பிரச்சினை என்றால் அப்பகுதி பொது மக்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் காக்கிகளும் சம்மந்தப்பட்ட ஏரியாவுக்கு போய் பிரச்சினைக்குரிய நபர்களை வரச்சொல்லி அந்த பிரச்சினையை காவல் நிலையத்தில் வைத்து பேசியும், வழக்கு போடுவதும் வழக்கம்.


ஆனால் தற்பொழுது துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடி நகர் காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு உதவ எங்களை அனுகவும் என்று ஒரு பிட் நோட்டீஸ் அடித்து நகர் முழுவதும் கொடுத்து இருக்கிறார்கள். அதில் ஒரு வார்டுக்கு ஒரு போலீசாரை நியமித்து அவருடைய செல் நம்பரையும் போட்டு இருக்கிறார்கள். அதன் மூலம் அந்த பகுதியில் ஏதாவது பிரச்சினை, திருட்டு, வழிப்பறி, மற்றும் கொலை நடந்தால் கூட அந்த போலீசாரை தொடர்பு கொண்டால் உடனே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார். அது போல் அந்த சம்மந்தப்பட்ட போலீசும் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தான் ரவுண்டில் இருப்பராம். இப்படி போடி நகர்பகுதிகளில் உள்ள 33வார்டுகளுக்கும் 33 போலீசாரை நியத்து இருக்கிறார்கள்.

அந்த போலீசார் மூலம் ஏரியாவில் இருந்து கொண்டு வரப்படும் பிச்சனைகளையும் இந்த சார்பு ஆய்வாளர் விசாரிப்பார். அதில் பொது மக்களுக்கு திருப்தி இல்லை என்றால் இன்ஸ்பெக்டர் விசாரிப்பார் என இன்ஸ்பெக்டர்கள் சேகர், காயத்திரி செல் நம்பரையும் போட்டு இருக்கிறார்கள். இதே போல் பெரியகுளம் தென் கரை காவல் நிலையத்தின் சார்பில் நகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் எந்தந்த போலீசார் என பெயருடன் செல் நம்பரையும் போட்டு இருக்கிறார்கள். அதோடு சப்.இன்ஸ்பெக்கடர்கள் பெயருடன் செல் நம்பருடன் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மதனகலா நம்பரையும் போட்டு பெரியகுளம் நகரில் பிட் நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி போடி.பெரியகுளத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 20க்கு மேற்பட்ட காவல் நிலையங்களிலும் இதே பாணியை காக்கிகள் கடைபிடித்து வருவதை கண்டு பொதுமக்களும் காக்கிகளை பராட்டி வருகிறார்கள் அதுபோல் இதே பாணியை தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கடைபிடிக்க வேண்டும் என பொது மக்கள் மத்தியிலும் பரவலான பேச்சும் ஒரு புரம் இருந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT