ADVERTISEMENT

மெகா தடுப்பூசி முகாம் - மூன்றாவது வாரமாக இலக்கை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை!

07:15 AM Sep 27, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் 'மெகா தடுப்பூசி முகாம்' நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், நேற்று (26.09.2021) தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

முதல் முகாமில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கைத் தாண்டி 28 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இரண்டாவது முகாமில் 15 லட்சம் பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 16.43 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற முகாமில் 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 24.85 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரமும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT