ADVERTISEMENT

திருச்சி சிவாஜி சிலை இனி திறக்க வாய்ப்பே இல்லையா? ஆதரவும் எதிர்ப்பும்!!

10:35 AM Feb 10, 2019 | Anonymous (not verified)

திருச்சி அருகே நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி சிவாஜி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜி கணேசன் சிலை அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. சிலையை திறக்க வலியுறுத்தி ரசிகர்கள் பல்வேறு வகையில் முயன்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிலையை உடனே திறக்க வேண்டுமென வலியுறுத்தி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி பாலக்கரை பகுதி சிவாஜி மிகவும் முக்கியமான இடம், சிவாஜி நண்பர்கள், அவர் வீடு, சிவாஜி திரைப்படம் எப்போதும் ஓடும் பிரபாத் திரையரங்கு என்று சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான பகுதியில் சிலை அமைக்க வேண்டும் என்று அவர் ரசிகர்கள் எல்லாம் இணைந்து பாலக்கரை ரவுண்டானாவில் நடிகர் சிவாஜி கணேஷனின் சிலை அமைக்கபட்டது. சிவாஜி கணேஷனின் ரசிகர்கள் சார்பில் இந்த சிலை அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

வெகு ஆண்டுகள் திறக்கப்படாமல் இருப்பது கண்டு ஆத்திரம் அடைந்த சிவாஜி ரசிகர் அடிக்கடி நள்ளிரவில் தீடீர் என சிவாஜியை மூடியிருந்த துணைியை ஆகற்றுவதும், பாலக்கரை போலிஸ் அதை மூடுவதும் தொடர் வேலையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் சிவாஜி ரசிகர்கள் கையெழுத்து வேட்டை எல்லாம் நடத்தினார்கள். ஆனாலும் துணி சுற்றப்பட்ட நிலையிலேயே இருக்கும் இந்த சிலையை, திறக்க கோரி அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், ஏனோ திறக்கப்படாமலேயே உள்ளது. எனவே இந்த சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு, சிவாஜி சிலையை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிவாஜி சமூக நலப்பேரவை மாநில துணை தலைவர் சிவாஜி சண்முகம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் பேசி போது… சிவாஜி சிலை திறப்பு அந்த பகுதி முஸ்லீம் மக்களுக்கும் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூராக இருக்கும் என எதிர்ப்பு தெரிவித்தால் தான் திறக்கப்படாமல் இருக்கிறது என்றார்.

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் இப்ராஹீம்ஷா விடம் பேசிய போது.. அவர் சார்.. இது திருச்சி மாநகரின் மிக முக்கியமான இடம். இந்த இடத்தில் எப்போதும் ஜன நெருக்கடி அதிகமாக இருக்கும். அதுவும் இல்லாம் முஸ்லீம் மசூதி இருக்கிற பகுதியில் இந்த இடத்தில் சிலை திறப்பது தவறு என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு சொல்லியிருக்கிறோம் என்றார்.

அந்த பகுதியில் சுமுகமான தீர்வு ஏற்படுமா...? சிவாஜி சிலை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய செய்தி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT