Skip to main content

பரிதாபமாக 8 ஆண்டுகளாக திருச்சியில் மூடிக்கிடக்கும் சிவாஜி சிலை!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
actor sivaji ganesan statue


 

திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலையைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரசிகர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. 
 

நடிகர் திகலம் சிவாஜி கணேசன், ஏறத்தாழ முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பெரும் புகழ் எய்தினார். வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட போராளிகளை நம் கண்முன் நிறுத்தினார். கர்ணன் போன்ற புராண பாத்திரங்களாகத் திரையில் வாழ்ந்து காட்டினார்.


 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். மிக உயரிய விருதான செவாலியே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.


 
அவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. காரணம், தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கினார். பிறகு திரையுலகில் நுழைந்து பல சாதனைகளைப் படைத்தார்.


இந்தச் சிலைக்கான செலவு முழுவதையும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஏற்று சிறப்பாக உருவாக்கினார். அச்சிலையை பாலக்கரை ரவுண்டானாவில் கொண்டு போய் வைத்து திறப்பு விழாவுக்கான தேதியை அறிவிப்பதற்குக் கோரிக்கை வைத்தனர். அந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இதனால்,  சிலை திறப்பு விழா தேதி தள்ளிப் போனது.


 
இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஜெ. முதல்வரானார். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், 94 அடி உயரமுள்ள சிவாஜியின்  வெண்கல சிலையைக் கடந்த 8 ஆண்டுகளாக துணி போர்த்தி மூடி வைத்துள்ளனர். திறக்கப்படாமலே உள்ளது. 

 

இதற்கிடையில்,  சிவாஜி ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன்பு நள்ளிரவில் தீடீரென சிவாஜி சிலையை மூடியிருந்த துணியை அகற்றினார்கள். அகற்றியவர்களை போலீசார் உடனே கைது செய்தனர். 


 
இந்தச் சூழ்நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு,  நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை திருச்சியில் நாளை நடத்தவிருக்கின்றனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப்லூயிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.