ADVERTISEMENT

திவால் சட்டத்தினை திருத்தம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! 

03:13 PM Oct 10, 2019 | santhoshb@nakk…

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் எ.சித்தூர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் நலிவுற்றதால், மத்திய அரசின் திவால் சட்டத்தின் படி, கரும்பு விவசாயிகள் இயங்குமுறை கடனாளியாகவும், கரும்பு ஆலைக்கு கடன் கொடுத்த வங்கிகள் பாதுகாக்கப்பட்ட கடனாளராக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசின் திவால் சட்டத்தின்படி, ஆலையை ஏலம் விடப்பட்டலோ அல்லது விற்கப்பட்டலோ, ஆலைக்கு கடன் கொடுத்த வங்கி கடன் தொகையை அடைத்த பிறகு, மீதமுள்ள தொகை இருந்தால் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT


மேற்படி சட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து, முன்னுரிமை கடன்தாரர்கள் என்கிற வகையில், கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விருத்தாசலம் பாலக்கரையில் கரும்பு விவசாயிகளை பாதுகாக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திவால் சட்டத்தினை திருத்தம் செய்ய கோரியும் 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை ஈர்க்கின்ற வகையில் முழக்கங்கள் எழுப்பினர்.

ADVERTISEMENT


மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலன் கருதி சட்டம் திருத்தம் செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு ஆலைகளின் முன்பு மாபெரும் நடத்தபோவதாக கூறியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பு அவ்வழியாக சென்ற சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் கரும்பு நிலுவை தொகை பற்றி முன்னதாகவே தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், தற்போது திவால் சட்டத்தில் விவசாயிகள் எவ்வித நஷ்டம் அடையாமல், நிலுவைத் தொகை வழங்குவதற்கு, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறி சென்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் கு.செல்லமுத்து, ஆர்.விருத்தகிரி, வேட்டவலம் மணிகண்டன், கார்மாங்குடி வெங்கடேசன், கே.வி.ராஜ்குமார், ஏ.பி.திருநாவுக்கரசு, கே.வி.இளங்கீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT