ADVERTISEMENT

வாக்காளர் அடையாள அட்டை இல்லை!  எப்படி வாக்களிப்பது?

03:09 PM Mar 20, 2019 | Anonymous (not verified)

இந்திய தேர்தல் ஆணையம் செயதி குறிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. இதன் படி வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்து விட்டாலோ (அல்லது) உடைந்து விட்டாலோ கவலை வேண்டாம். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்களிக்கும் சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். இந்த சீட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இத்துடன் "வாக்காளர் அடையாள அட்டை" எடுத்து செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

அடையாள அட்டை இல்லையென்றால் எந்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான வழிமுறையை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது.
1.பாஸ்போர்ட் (Passport)
2. ஓட்டுனர் உரிமம் (Driving License)
3. வங்கிக்கணக்கு புத்தகம் (Bank pass book)
4.பான் கார்டு (PAN CARD)
5.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அடையாள
அட்டை
6.ஆதார் கார்டு (Aadhar Card)
7.மத்திய தொழிலாளர் நலத்துறையின் ஹெல்த் இன்சுரன்ஸ் ஸ்மார்ட் அட்டை
8.மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியாதர்களின் ஆவணங்கள்.

ADVERTISEMENT

உள்ளிட்ட ஆவணங்களை தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் இத்தகைய ஆவணங்களில் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை தவறியர்கள் .இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி 100% வாக்கு என்ற இலக்கை இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து எய்திடுவோம். இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு நாளும் மக்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT