ADVERTISEMENT

“அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு சட்டப்படிப்பை நடத்த அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை”-நீதிமன்றம்!

06:23 PM Jul 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்த அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்தப்படுவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுசம்பந்தமாக பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT