ADVERTISEMENT

தேர்தல் கமிஷனே வேண்டாம்... உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்து:சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம்- மதுரையில் பரபரப்பு!!

08:35 PM May 11, 2019 | annal

மதுரை திருபரங்குன்றம் இடைதேர்தல் கடைசிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நெரத்தில் அங்கு போட்டியிடும் 35 சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து தேர்தல் கமிஷன் என்ற அமைப்பையே நீக்கிவிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கொண்டு தேர்தலை நடத்தவேண்டும் இல்லை என்றால் நியாயமான மக்களாட்சி மலராது எங்களுக்கு பயமா இருக்கு என்று புகார் கொடுக்க வந்தோம் என்று கூறினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் உக்கிரபாண்டியோ ”தேர்தலாசார் இது ஒரு ஏரியாவிற்கு ஒரு அமைச்சர் தெருவுக்கு ஒரு எம்.எல்,ஏ என அலுகவலம் போட்டு ஒட்கார்ந்திருக்க இவர்களுக்கு பாதுகாப்பாக தெருவுக்கு தெரு போலீஸார் இருக்க மொத்தம் உள்ள 292 ஓட்டு பூத்துக்கு 20 பேர் ஒவ்வொரு வீடாக சென்று பெயர், வங்கி கணக்கு எண், போன் நம்பர், ஆகியவைகளை சேகரித்து விட்டனர். அடுத்து வெளியாட்கள் ஆங்காங்கே வாடகைக்கு வீடு பிடித்து கூட்டம் கூட்டமாக தங்கி அவர்களுக்கு சாப்பாடு செய்கிறோம் எனற சாக்கில் தெருவுக்கு தெரு மக்களுக்கு கறி சாப்பாடு ஜோரா பறிமாறபடுகிறது..

இவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளில் டாஸ்மாக்கில் இருந்து நேரடியாக சரக்கு வேன்களில் கொண்டுவந்து இருப்பு வைக்கபடுகிறது முக்கிய விஐபிகளான ஓ.பி.எஸ். ஈ.பிஎஸ் வருகையின் போது கூட்டத்தை கான்பிக்க அந்தந்த தெருக்களில் உள்ளவ்ர்களுக்கு கறிவிருந்து சரக்கு படுஜோராக இருக்கு என்று போன்போட்டு அழைத்து மதியத்திலிருந்து அவர்களை தயார்படுத்தி ஸ்பாட்டுக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.

பேனர்,கொடி,பேண்ட்செட், செண்டமேளம்,ஆங்காங்கே தலைவர்கள் வரும் போது கூட்டத்தை நிறுத்திவைக்க டான்ஸ் பார்டிகள்,அனைத்தும் காண்ட்ராக்ட் தான் மொத்தமாக கொடுத்துவிட்டால் போதும் அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

அடுத்து அதிமுக கட்சிகாரர்களுக்கு டோக்கன் கொடுத்துள்ளனர். அவர்கள் திருபரங்குன்றத்தில் குறிப்பிட்ட டீ ஸ்டால் மற்றும் ஹோட்டல்களில் மூன்றுவேளை சாப்பிட்டு கொள்ளலாம் இதனால் சுற்றி உள்ள டீ கடைகாரர்கள் ஹோட்டல்காரர்கள் அந்தத்த பகுதி அமைச்சர்கள் தங்கிருக்கும் வீடுகளுக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர் தங்களுக்கு அந்த ஆர்டர் வாங்க....

சரி எதிர்கட்சிகள் அமமுகவும், திமுகவும் என்ன செய்கின்றன என்று பார்த்தால் இந்தளவுக்கு செய்யமுடியாவிட்டாலும் அனைத்து வீடுகளுக்கும் சென்று பெயர் போன் நம்பர் வாங்கிவிட்டனர். கட்சிகாரர்களுக்கு தினசரி செலவுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டு வேலைகள் நடக்கிறது. பிரச்சாரத்தின் அன்று கூடுதல் கவனிப்பும் கொடி, தோரணம் கட்ட இவர்களும் காண்ராக்ட்தான் விட்டிருக்கிறார்கள். ஆக இந்த மூன்று கட்சிகளில் எதிர்கட்சியான அமமுக, திமுக விற்கு போலிஸார் எவ்வளவுதான் கெடுபிடி செய்தாலும் அதையும் மீறி ஆட்கள் பலம் கட்சி பலத்தால் அதை முறியெடித்து காரியம் சாதிக்கின்றனர்..

அய்யோ பாவம் இந்த சுயட்சைகள்தான் சார் நாங்கள் பிரச்சாரத்திற்கே ஒவ்வொரு முறையும் போலிஸிலும் சம்மந்தபட்ட வி.ஏ.ஓ விடம் ஒப்புதல் வாங்கிவிட்டுதான் பிரச்சாரமே செய்யமுடியும் எங்களை ஏளனமாக விரட்டுவது அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பது என கொடுமை தாங்க முடியல அதுதான் நாங்க எல்லோரும்

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரா கொடுக்க வந்திருக்கோம். முடிஞ்சா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பார்த்தும் ஜனாதிபதியை பார்த்தும் கொடுக்கபோறோம்.. என்றுவேட்பாளர்கள ஆறுமுகம், நாகராஜ், உக்கிரபாண்டி, சேகர், மணிகண்டன் ஆகியோர் புகார்கொடுக்க வர அவர்களை உள்ளே விடாமல் போலிஸார் தடுத்துவிட்டனர்..

கொதித்து போன வேட்பாளர் நாகராஜன் ”நம்மிடம் தினமும் மக்களுக்கு 300 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒவ்வொரு பூத்திற்ககு 100 பேரை சேர்த்துவைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கு ஓட்டுகேட்டு போனாலும் மக்கள் இல்லை எல்லோரும் ஆளும் கட்சிகாரங்க சம்பளம் கொடுத்து அழைத்து சென்றிருக்கிறார்கள் என்கின்றனர்..

அவர்களின் ஒரு நாள் செலவே 3,கோடியை தாண்டும் கடைசி கட்டத்தில் அதிமுக ரூ.5000 மும் அமமுக ரூ.2000மும் திமுக ரூ1000மும் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் கமிஷனுக்கு எல்லாமே தெரியும். இப்பவே ஒவ்வொரு கட்சியும் ஒரு நாளைக்கு 2 கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர் மக்களுக்கு பணம் கொடுப்பதை வீடியோ எடுத்தே புகார் கொடுத்துவிட்டோம் ஒன்றும் செய்யமுடியவில்லை.

எங்களை தொகுதிகுள்ளேயே விடமாட்டிகிறாங்க ஏய் நீ யாரு சுயேட்சையா எங்க அன்ணன் ஓட்டை பிரிக்க வந்திருக்கியா? வெளியே போ என்று சொல்லும் அதிமுக கட்சிகாரர்கள் எங்க ஊர்காரரே இல்லை சென்னையிலிருந்து வந்தவர்கள் என்ன கொடுமை சார் இது. என்னோட ஊரில் நான் ஓட்டு கேட்க முடியவில்லை இது என்ன சனநாயகமா? அப்ப பதிவு செய்த கட்சிகாரர்கள்தான் தேர்தலில் நிற்கமுடியுமே? தேர்தல் அதிகாரி வந்த அன்று இதை சொன்னோம் சரி சரி தலையாட்டினார்கள் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. என்று கொதிக்க அடுத்திருந்த சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகமோ, எங்க கண்ணுமுன்னாடி ஆளும் கட்சி பணபட்டுவாடா செய்கிறது அதை படம் பிடித்து புகார்கொடுத்தோம் எதுவும் இதுவரை கண்டுகொள்ளவில்லை ..

”தெருவுக்கு தெரு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்வதை வீடியோ ஆதாரத்தோடு தேர்தல் கமிஷனின் அவசர அழைப்பிற்கு போனில் தொடர்பு கொண்டு சீக்கிரம் வாங்க இந்த இடத்தில் பணவிநியோகம் நடக்கிறது என்றால் நீ யாரு? எங்க நிற்கிற என்று சொல்லிவிட்டு போலீஸ் விரைந்து வந்து என்னை தர தரவென்று இழுக்க சார் நான் திருபரங்குன்ற வேட்பாளர் புகார் கொடுத்த என்னையே இப்படி செய்தால் என்ன சார் என்று கெஞ்சுகிற நிலைமையில் இருக்கு சார்.

வேறுவழியில்லாமல் சுயேட்சையா நிற்கிற 35 பேருக்கும் இதே நிலைமைதான் அதனால் நாங்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்த முடிவெடுத்து ஆட்சியர் அலுவலகம் வ்ந்திருக்கோம். அனைத்து இடைத்தேர்தலையும் நிறுத்துங்க இல்லாவிட்டால் யாரு இந்த தொகுதியை அதிக விலைக்கு எடுக்கிறாங்களோ அவர்களுக்கு விற்றுவிடுங்கள். தேர்தலே வேண்டாம் எதுக்கு இவ்வளவு பணத்தை கொட்டனும் எல்லாம் வியாபாரம்தானே ஜெயித்து போட்டபணத்தை எடுக்கபோறாங்க அப்புறம் எதுக்கு தேர்தல் ”போங்கடா நீங்களும் உங்க தேர்தலும்” என்று ஆவேசமாக கத்த போலிஸார் அவர்களை இடத்தை காலிபண்ணுகிறீர்களா இல்லை அரஸ்ட் பண்ணவா என மிரட்ட தலையில் அடித்து கொண்டு வேட்பாளர்கள் கலையத் தொடங்கினார்கள்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT