நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான புகாரில் விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகிலுள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவை சேர்ந்த பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சரவணகுமார் தங்கியிருந்தபகுதியில் அங்குள்ள மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் அம்பலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisment

Election Commission directs to submit report

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியிருந்த நிலையில்இதனையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த தேர்தல் அதிகாரிகள் ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்துதேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில்திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை தாக்கி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்ததாக அம்பலம் கிராமத்தினர் 24 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பறக்கும் படை அதிகாரி ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம்திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 மீது முறைகேடாக பணம் வைத்திருந்ததாக 5 பிரிவுகளின் கீழ்வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நேற்று இரவு அந்தவீடு மற்றும் காரில்நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் வேறுபணம் எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த பணப்பட்டுவாடா புகார் தொடர்பான முழு அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறார்.