ADVERTISEMENT

''குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேண்டாம்” -சுவீடனில் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டத்தின் சார்பாக போராட்டம்

09:14 PM Jan 04, 2020 | kalaimohan

சுவீடனில் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டத்தின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஜனவரி 4ஆம் நாள் சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், பெரியார் அம்பேத்கார் வட்டம் சார்பாக இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டாம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


நகரின் மையப் பகுதியான குஷ்டாஃப் அடால்ஃப் சதுக்கத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் குடும்பத்தினருடன் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர். கடும் குளிர் இருந்தச் சூழலிலும் சிறு குழந்தைகள் உட்பட, வயதானவர்கள் வரை அனைத்து மொழிப் பேசும் மக்களும் பங்குக்கொண்ட ஆர்பாட்டத்தில், ”இந்தியாவின் பன்முகத்தன்மையையும் சமயச் சார்பற்றத் தன்மையையும் காப்போம் என முழக்கம்” முதன்மையாக இருந்தது.

இந்த ஆர்பாட்டத்தில், இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள் வாசிக்கப்பட்டு, கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் அரசியல் சாசனத்தின் முக்கியப் பகுதிகளை முழக்கமாகவும் இட்டனர். பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம் சார்பாக கபிலன் காமராஜ் வரவேற்புரையையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்புலம் குறித்த விளக்கத்தினை முனைவர் விஜய் அசோகனும் வழங்கினர்.

காஷ்மீரைச் சார்ந்தவர்களும் அசாமைச் சார்ந்தவர்களும் தங்கள் நேரடி அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டனர். ”வேண்டாம், வேண்டாம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வேண்டாம்” , ”காப்போம் காப்போம், இந்தியாவின் சமயசார்பற்றத் தன்மையைக் காப்போம்” உள்ளிட்ட முழக்கங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முழங்கப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT