ADVERTISEMENT

என்.எல்.சி: பணியில் இருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த தொழிலாளி! 

04:54 PM Jan 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்த வெளி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தென்குத்து புதுநகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் வெல்டராக சொசைட்டியில் பணிபுரிந்து வந்தவர், இன்று காலை சுரங்கம்1(A)-விற்கு பணிக்குச் சென்றிருக்கிறார்.

ADVERTISEMENT


அங்கு வழக்கமாக பஞ்சிங் செய்யுமிடத்தில் பஞ்சிங் செய்வதற்காக சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதையடுத்து என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக, "பணியின்போது இறந்துபோன செல்வராஜ் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்" என ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT