ADVERTISEMENT

'புயல் பாதிப்பு... தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி செய்யும்' - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

11:38 AM Nov 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


'வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் சென்னை, கடலூர், புதுச்சேரியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுமட்டுமல்லாமல் தாழ்வான பகுதிகள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இருப்பினும் மரங்கள், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பயிர்கள், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புயல் பாதிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்த அமித்ஷா, 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என முதல்வர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT