ADVERTISEMENT

'அதிதீவிரப் புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும்'! - வானிலை ஆய்வு மையம் தகவல்!

03:59 PM Nov 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிதீவிரப் புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும். புதுச்சேரியிலிருந்து 380 கி.மீ தொலைவில் 'நிவர்' புயல் நிலை கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 430 கி.மீ தொலைவில் 'நிவர்' புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறிய பின், அதி தீவிரப் புயலாக வலுப்பெறும். 'நிவர்' புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கக்கூடும். கடந்த மூன்று மணி நேரமாக, ஒரே நேரத்தில் நிலைகொண்ட நிவர் புயல், தற்போது 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT