ADVERTISEMENT

நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும்! -விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

04:58 PM Dec 13, 2019 | kalaimohan

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் வழக்கின் சாட்சியான அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

ADVERTISEMENT


கல்லூரியின் செயலாளர் ராமசாமி அரசு தரப்பினரால் மூடிய அறையில் விசாரிக்கப்பட்டார். நிர்மலாதேவியை அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனுவை விசாரித்த நீதிபதி 27-ஆம் தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்தார். இவ்வழக்கில் வரும் 27-ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது அந்நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் –

ADVERTISEMENT

“இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தால் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு தண்டனைதான் கிடைக்கும். நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 1 முதல் 32 சாட்சிகளை படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், நிர்மலாதேவி குறித்து செய்தியாளர்கள் செய்தி வெளியிட தடையில்லை என்று தெரிவித்தார். நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநரும் அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால், நிர்மலாதேவிக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும், தண்டனைதான் கிடைக்குமென்று கருதுவதாலும் வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT