ADVERTISEMENT

வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி நிர்மலா தேவி மனு - நாளை விசாரணை என நீதிபதி அறிவிப்பு

02:17 PM Nov 12, 2018 | cnramki


ADVERTISEMENT

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று (12.11.2018) இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில், இந்த வழக்கிற்க்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் சி.பி.சி.ஐ.டியால் போடப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தனித்தனியாக கடந்த 8ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இன்று, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நிர்மலா தேவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி 3 பேரின் மனுக்களும் நாளை (13.11.2018) விசாரிக்கப்படும் என்றும், 3 பேரையும் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

படங்கள்: அண்ணல், ராம்குமார்


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT