karuppasamy

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கருப்புசாமி மற்றும் முருகன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர்கள் மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

Advertisment

நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், கடந்த இரண்டு நாட்களாக வாக்குமூலம் என்று வெளிவருவது அனைத்தும் பொய் என்றார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் வெளியே வந்த கருப்புசாமியிடம், கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் பற்றிய வாக்குமூலம் பத்திரிகையில் வெளியாகி வருகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு கருப்பசாமி, கடந்த இரண்டு நாட்களாக வாக்குமூலம் என்ற பெயரில் வரும் அனைத்தும் பொய். நான் இரண்டு முறைதான் நிர்மலா தேவியை பார்த்திருக்கிறேன் என்றார்.