ADVERTISEMENT

தமிழகத்தில் இரவு ஊரடங்கு... வெறிச்சோடிய சென்னை கோயம்பேடு! (படங்கள்)

07:25 PM Apr 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

இன்று இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிற்றுக் கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்..தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள் பயணத்தை முடிக்கும் வகையில், அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்து சங்கம் சார்பிலும் இதேபோல் பகலில் பயணத்தை முடித்துக்கொள்ளும் வகையில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் பகலில் பேருந்தை இயக்கினால் கூட்டம் குறைவாக இருக்கும், பயணிகள் பயண நேரத்திற்குத் திட்டமிட்டு வருவது கடினம் என்பதால், ஆம்னி பேருந்துகளை இயக்குவது கடினம் எனத் தனியார் பேருந்து சங்கத்தின் ஒருசாரார் அறிவித்தனர். இந்த மாறுபட்ட கருத்து குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இறுதியாக பகலில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் எனத் தனியார் ஆம்னி பேருந்து சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

இந்நிலையில் இன்று இரவு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் வழக்கமாக இரவில் பேருந்து நிலையத்தில் தங்கும் குடிமகன்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் ஆகியோரை பேருந்து நிலைய காவலாளிகளும் காவல்துறை அதிகாரிகளும் அப்புறப்படுத்தினர். இரவு 9 மணிக்கு மேல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT