ADVERTISEMENT

என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை தாக்கிய ரவுடி மணி கைது!

10:19 AM Jan 11, 2020 | santhoshb@nakk…

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 15 என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

ADVERTISEMENT


இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெங்களூர் மணி (எ) மணிகண்டன் என்.எல்.சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்லும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் செல்வேந்திரன் கஞ்சா மணியை பிடிக்க முயற்சித்தார். அப்போது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனை தாக்கி, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வேந்திரனை மீட்டு என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

ADVERTISEMENT


கஞ்சா மணி பாதுகாப்பு படை வீரரை கத்தியை கொண்டு மிரட்டுவதும், முட்டி போட வைத்து அடிப்பது போலவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் பெங்களூர் மணியுடன் சபரிவாசன் (20), ஷாருக்கான் (எ) சண்முகம் (18), சுதாகர் (22) மீது ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்து, படை வீரரை கீழ்த்தரமாக நடத்தி, கொலை செய்ய முயன்றது சம்மந்தமாக மந்ததாரகுப்பம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சபரிவாசன் மற்றும் ஷாருக்கான் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி பெங்களூர் மணி, சுதாகர் தலைமறைவாக இருந்த நிலையில் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து மந்தாரகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் இரவிச்சந்திரன், டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் பழைய கழிப்பிடத்தில் பதுங்கி இருந்தவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டபோது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, பணிசெய்ய விடாமல் தடுத்து, கத்தியால் உதவி ஆய்வாளரை கொல்ல முயன்றனர். பின்னர் பழைய பாத்ரூம் சுவர் ஏறி குதித்த தப்பிக்க முயன்ற பெங்களூர் மணி, கூட்டாளிகள் சுதாகர், அப்பு (எ) சிவக்குமார் (20), முடப்பள்ளி அன்பு (36) ஆகியோர்களை வளைத்து பிடித்து, வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கஞ்சா மணி என்கிற பெங்களூர் மணி மீது மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT