ADVERTISEMENT

அடுத்தகட்டத்தில் இறங்கும் மே-17 இயக்கம்; பெங்களூருவில் கூடும் தமிழ் அமைப்புகள்!

11:33 AM Jul 07, 2018 | Anonymous (not verified)

திருமுருகன் காந்தி தலைமையில் இயங்கும் மே-17 இயக்கம் சார்பில் பெங்களுருவில் நேற்று தமிழீழம்! இன்று தமிழ்நாடு? என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ற தலைப்பில் நாளை காலை அரங்க கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அந்த அமைப்பினர் கூறியதாவது.


ADVERTISEMENT


ADVERTISEMENT

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம் எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் எடுப்பு, கெயில் பைப்லைன்கள், கடலூரில் பெட்ரோலிய மண்டலங்கள், தேனியில் நியூட்ரினோ, இயற்கை வளங்கள் சுரண்டல் என தமிழ்நாடு தொடர்ச்சியான பல்முனை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்? பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஜூலை 8, 10 மணிக்கு 16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர் இந்த முகவரியில் நடக்கவுள்ளது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கருத்துக்களை விவாதிக்கவுள்ளனர் அடுத்த கட்ட போராட்ட வடிவங்கள் பற்றியும் பேசப்படும்" என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT