சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று (28.02.2023) காலை 10 மணிக்கு, மே பதினேழு இயக்கம் சார்பில்தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்துஇலங்கை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தலைமையில் நடைபெற்றது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு, “தமிழர்களே, நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்.தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய், நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்,தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு” என முழக்கங்களை எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/may-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/may-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/may-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/may-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/may-5.jpg)