ADVERTISEMENT

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்... டாஸ்மாக் நேரம் குறைப்பு!

06:34 PM May 05, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கடந்த 3 ஆம் தேதி இரவு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் மே 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் 20-ஆம் தேதி வரை கீழ் சொன்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும். பேருந்துகள், டாக்ஸி, ரயிலில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி. மளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். வணிக வளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை. தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 20 பேர் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளான மருத்துவத் தேவைகளுக்குச் செல்லலாம். அதேபோல் அவசரத் தேவைக்காக ரயில் நிலையம், விமான நிலையங்களுக்குச் செல்லலாம். மருந்தகங்கள், பால் விநியோகத்திற்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் இறைச்சிக் கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகள் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், நாளை புதிய நடைமுறைகள் தொடங்கும் நாளில் இருந்து டாஸ்மாக் கடைகள் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT