ADVERTISEMENT

புதிய முதலீடுகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!

11:20 AM Oct 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (12/10/2020) கையெழுத்தாகிறது.

ADVERTISEMENT

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஜே.எஸ். டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட், ஐநாக்ஸ் லிக்யூட் ஆக்ஸிஜன் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நாளை (12/10/2020) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரூபாய் 10,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதால் சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முதலீடுகள் மூலம் ஓசூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமையவுள்ளது. ஏற்கனவே, 41 நிறுவனங்களோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூபாய் 30,664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 67,212 பேருக்கு வேலை வாய்ப்பு உருவானது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT