ADVERTISEMENT

புதிய கூடுதல் கரோனா சிகிச்சை மையம் திறப்பு.... பார்வையிட்ட கட்சி நிர்வாகிகள்! (படங்கள்)

03:39 PM Jun 01, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் நோயின் தாக்கம் உச்சத்தை அடையும்போது நோயாளிகள் மருத்துவமனைகளில் குவிந்துவிடுகின்றனர். அதனால் படுக்கை தட்டுப்பாடு அதிகளவில் இருந்துவந்தது.

ADVERTISEMENT

ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்ஸ்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு அதிக இடங்களில் தமிழக அரசின் சார்பில் கரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (01-06-2021) காலை 10 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே. சிற்றரசு, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT