ADVERTISEMENT

தீராத கோரிக்கைகளும் ஓயாத போராட்டங்களும்...

09:59 AM Feb 20, 2020 | santhoshb@nakk…

சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நெல்லையைப் பிரித்து பதிய தென்காசி மாவட்டத்துடன் இணைப்பதை எதிர்த்து, தொலைதூர கிராம மக்களின் போராட்டங்கள் 40 நாட்களாக நீடித்த நிலையில் தற்போது வெளியான ஏரியா வரையறைக்குப் பின்பு எதிர்ப்பு போராட்டம் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமடைத்துள்ளது.

இந்த மாவட்டத்தின் திருவேங்கடம் தாலுகாவைச் சேர்ந்த மலையான்குளம் பஞ்சாயத்திலடங்கிய இந்திரா நகர், பாத்திமா நகர், ஜே.டி.நகர் யோகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் அருகிலுள்ள குருவிகுளம் ஒன்றியத்திலிருக்கிறது.

இந்தக் கிராமங்களைப் பிரித்து தொலை தூரமுள்ள மேலநீலிநல்லூர் யூனியனுடன் இணைப்பதற்கான மறு வரையறை வெளியானதை எதிர்த்து அந்தக் கிராமங்களின் மக்கள் திரண்டு வந்து இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வழக்கறிஞர் கண்ணன் தலைமையில் போராடிய மக்கள், தங்களின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு போன்றவைகளைத் தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்க வந்தனர்.

ADVERTISEMENT


பேச்சுவர்த்தையில் ஈடுபட்ட தாசில்தார் அதிகாரிகளின் பார்வைக்கு அவர்களின் மனுவை அனுப்பிவைப்பதாக ஒப்புதலளித்த பின்பே அமைதியானார்கள். காலம் காலமாக எங்கள் பஞ்.கிராமங்கள் 5 கி.மீ. தொலைவிலுள்ள குருவிகுளம் யூனியனில்தானுள்ளது. பஸ் வசதியும் உள்ளது, கால்நடையாக, சைக்கிள் மூலமாகவும் சென்றுவிடுவோம்.

எங்களின் தேவைகள் நடந்தேறியுள்ளன. இதைவிடுத்து எங்கள் கிராமங்களை போக்குவரத்து வசதியற்ற 26 கி.மீ. தொலைவிலுள்ள மேலநீலிநல்லூர் யூனியனுடன் இணைப்பது மக்கள் நலன் பொருட்டா. அதே சமயம் அந்த யூனியனின் 8 கி.மீ. தொலைவிலுள்ள சாயமலை பஞ்சாயத்தை எங்கள் பஞ்சாயத்திற்குப் பதிலாக 23 கிமீ. தொலைவிலுள்ள குருவிகுளம் யூனியனில் இணைக்கிறார்கள் இதெப்படியிருக்கு. இங்குள்ள ஆளும் கட்சியின் அரசியல் புள்ளியின் சுயலாபத்திற்காக மக்களைப் பந்தாடுவதா?. அதனால் தான் இந்த எதிர்ப்பு, கோரிக்கை. நிறைவேறா விட்டால். வரும் தேர்தலைப் புறக்கணிப்பதோடு சாலை மறியலிலிலும் ஈடுபடுவோம் என்கிறார்கள் காட்டமாக.


இங்கே இப்படி என்றால் நெல்லை மாவட்டத்தின் அம்பை சமீபம் உள்ள பாப்பாக்குடி ஒன்றியத்தின் இடைகால், பள்ளகால் பனஞ்சாடி ராங்கசமுத்திரம் அடைச்சாணி உள்ளிட்ட கிராமத்தினர் தங்கள் கிராமங்களை தென்காசி மாவட்டத்தில் இணைப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 5 கி.மீ. தொலைவு சமீபம் உள்ள அம்பை தாலுகா சென்று வர வசதியுள்ள தங்கள் பகுதிகளைப் பிரித்து போக்குவரத்து வசதியற்ற 40 கி.மீ. தொலைவிலிருக்கும் தென்காசியோடு இணைப்பதை 40 நாட்களாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அடைச்சாணி தவிர்த்து மற்றக் கிராமங்கள் மட்டும் நெல்லையுடன் இணைக்கப்பட்டது. இதனால் அடைச்சாணி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளைப் பள்ளி்க்கு அனுப்பாமல் புறக்கணிப்பும் செய்தனர். இந்நிலையில் தங்கள் பகுதிகளை நெல்லையுடன் இணைத்து அறிவிக்காமலிருப்பதைக் கண்டித்து நேற்று (19/02/2020) 500- க்கும் மேற்பட்ட மக்கள் அடைச்சாணி ஆலயத்தில் திரண்டனர்.


ஆனாலும் அதிகாரிகள் யாரும் வராமல் போகவே. அனைவரும் சாலை மறியலில் ஈடுபடக் கிளம்பினர். அடைச்சாணி கிராம விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அது சமயம் அங்கு வந்த தென்காசி தாசில்தார் சண்முகம், அம்பை டி.எஸ்.பி. சுபாஷினி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மக்களின் நலன் பொருட்டுத்தான் அரசு. 5 கி.மீ தொலைவை விடுத்து 40 கி.மீ. தொலைவு மக்களை அலைய விடுவதா?. மக்களைப் பந்தாடுவதா?. என்றும் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அம்மக்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், கோரிக்கைப்படி கண்டிப்பாக நெல்லையுடன் இணைக்க கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சண்முகம் உறுதியளித்ததனடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் விலக்கப்பட்டதாகத் தெரிவித்தினர். இது தொடர்பாக மாவட்டக் கலெக்டரை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தினர்.

மக்களுக்காகத் தான் அரசு. அரசுக்காக மக்கள் அல்ல என்பதை உணர்த்தவதாக இருந்தது மக்களின் போராட்டம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT