ADVERTISEMENT

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் -பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா..!

07:39 PM Jun 13, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் வேண்டும் என கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையிலிருந்து... "திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியில் வசித்து வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே தோழர் அசோக் மற்றும் அவரது தாயார் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அசோக்கின் தாயார் வைத்திருந்த புல்லுக்கட்டு அப்பகுதியில் இருந்து மற்றொரு சமுகத்தை சேர்ந்தவர் மீது உரசியதால் ஏற்பட்ட பிரச்சினையில் அசோக்கின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மர்ம நபர்களால் அசோக் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பது சாதி ஆதிக்க வெறியர்களால் நடைபெற்றதாகவே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாதியின் அடிப்படையில் கொலை நடைபெற்றிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. எனவே இந்த கொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளைத் தடுக்க சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறது." என்கின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT