ADVERTISEMENT

வழிவிடாத பக்கத்து வீட்டார்... இறந்தவர் உடல் 3 நாட்களுக்கு பின்னர் தகனம்..!

02:42 PM Apr 08, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் மயானச் சாலைகள் என்பது ஆக்கிரமிப்புகளால் தடைபட்டிருப்பதால், பல இடங்களில் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, சேந்தாக்குடி ஊராட்சி கீழையூர் வெள்ளைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் துரைச்சாமி(43).

விவசாயியான இவர், நேற்று முன்தினம் (06.04.2021) இரவு 7 மணிக்கு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் துக்கம் விசாரித்தனர். மேலும் நேற்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அருகில் உள்ள வீட்டினர் சடலத்தை தூக்கிச் செல்ல வழிவிடாததால், இன்றுவரை சடலம் அவரது வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்று, கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் மற்றும் போலீசார், இறந்தவரின் உறவினர்களிடம் சமதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை தூக்கிச் செல்ல உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் துக்க வீட்டில் ஒரு சிலர் தவிற வேறு உறவினர்கள் கூட இல்லை.

இதேபோல சாலை வசதி இல்லாத பல கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு இறப்பின்போதும் இப்படி அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் அதிகாரிகளே சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT