2 children drowned in pool, 4 children rescued

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மற்றும் பஞ்சமூர்த்தி. இதில் ராஜகோபாலின் குழந்தைகள் அனுப்பிரியா (13), மணிகண்டன் (9) மற்றும் பஞ்சமூர்த்தியின் குழந்தைகள் காவியா (13),விக்னேஷ் (6).

Advertisment

மேலும் கறம்பக்குடி பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் மகள்கள் நிவேதா (11), நிரோஜா (13) ஆகிய 6 சிறுவர்கள் (கறம்பக்குடி பிலாவிடுதி கிராமத்தில் இருந்து தாத்தா வீட்டிற்கு வந்திருந்த 2 சிறுமிகள்) அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.

நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கிய சிறுவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்ஓடிச் சென்று தத்தளித்த சிறுவர்களைக் கரைக்குத் தூக்கி வந்தனர். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த உடையப்பன் மகள் நிவேதா (11), சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் தண்ணீரிலேயே மூச்சுத்தினறி இறந்துள்ளது தெரிய வந்தது.உடன்பிறந்தவர்கள் கண் முன்பே இருவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment