ADVERTISEMENT

நீட் ஆள்மாறாட்ட சர்ச்சை... தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை விசாரணை!

07:56 PM Sep 21, 2019 | kalaimohan

தேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை நடத்திய விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித்சூர்யா மும்பையில் நீட்தேர்வு எழுதியதின் மூலம் தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூரியா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாணவனின் தந்தையிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்று வரும் நிலையில் சமபந்தப்பட்ட மாணவன், அவரது தந்தை உட்பட அந்த குடும்பமே தலைமறைவாகியுள்ளது. தற்போது இந்த சர்ச்சை பேருருவம் எடுத்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரனிடம் தனிப்படை போலீஸார் 2.45 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT