ADVERTISEMENT

நீட் தேர்வு முடிவு... மீண்டும் சாதித்த அரசுப்பள்ளி மாணவிகள்!

10:14 PM Nov 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவராகும் கனவில் அரசுப் பள்ளி ஏழை மாணவ, மாணவிகள் தேர்வுகள் எழுதி காத்திருக்கின்றர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வருடம் 584 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா 514 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரே பள்ளியில் 4 மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கு சென்று சாதித்த கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 7 பேர் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

தீபிகா 345 மதிப்பெண்களும், வாலண்டினா 338 மதிப்பெண்களும், கனிகா 305 மதிப்பெண்களும், சுவாதி 291 மதிப்பெண், யமுனா 281, நிஷாலினி 261, நிஷா 217 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் 150 மதிப்பெண்கள் வரை 5 மாணவிகள் பெற்றுள்ளனர். அதனால் இந்த வருடமும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவப் படிப்பிற்கு செல்ல தேர்வாகும் நிலை உள்ளதால் பள்ளி ஆசிரியர்களையும், மாணவிகளையும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT