ADVERTISEMENT

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்! பிரியங்காவுக்கு ஜாமின்! தாயின் மனு தள்ளுபடி!

06:26 PM Oct 31, 2019 | santhoshb@nakk…

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தர்மபுரியைச் சேர்ந்த பிரியங்காவும் அவருடைய தாயார் மைனாவதியும் தாக்கல் செய்திருந்த மனுவில்,

ADVERTISEMENT

‘கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறோம். 2019- ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 397 மதிப்பெண் பெற்று சென்னையிலுள்ள சவிதா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள எனக்கும் என் தாயாருக்கும் ஜாமின் வழங்கக்கோரி கடந்த அக்டோபர் 23- ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எனக்கும் என் தாயாருக்கும் ஜாமின் வழங்க உத்தரவிட வேண்டும். எனது தாயாரின் உடல் நலம் கருதியும் ஜாமின் வழங்க வேண்டும்.’என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி பிரியங்காவின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில், மாணவியின் தாயார் மைனாவதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்பதால், ஜாமின் மறுக்கப்பட்டு அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT