ADVERTISEMENT

இரவு நேரக் கடைகள் வேண்டும்! முதல்வரிடம் கோரிக்கை வைத்த காரைக்குடி மக்கள்!

02:06 PM Aug 04, 2018 | nagendran



புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரக் கடைகள் இயங்குவதற்கு அனுமதி வேண்டி முதல்வர் தொடங்கி, ஆட்சியர், எஸ்.பி, டி.எஸ்.பி.வரை மனுக்கள் அனுப்பி வருகின்றனர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனின் சுற்று வட்டார மக்கள்.

ADVERTISEMENT

"உலகப்புகழ் பெற்ற செட்டிநாட்டுத் தலைநகரம் காரைக்குடி, ஐக்கிய நாட்டுச்சபையால் "கலாச்சார நகரம் எனும் Heritage City" என்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு நகரமாகும். இதனால் உலகமெங்கும் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சிவகங்கை மாவட்டத்திலேயே அதிமமான தொழில் வளம் மிகுந்த நகரமாகவும், அதிக வருவாய் தரும் நகரமாகவும், காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களின் மையப் பகுதியாகவும் இருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால் இந்த ஊருக்கு வருகின்ற சுற்றுப்பயணிகள், இரவில் சாப்பிடுவதற்கோ, ஒரு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்குக் கூட இங்கு இரவு 11 மணிக்கு மேல் இங்கு கடைகள் இருப்பதில்லை. இங்குள்ள காரைக்குடி பேருந்து நிலையம் இராமேசுவரம், திருச்சி, மதுரை, ஏர்வாடி, வேளாங்கண்ணி போன்ற பல வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் இவ்வழியாகவே செல்கின்றன. இதனால் இரவு முழுவதும் பல பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் அப்பேருந்தில் வந்து இறங்கும் பயணிகள் அருந்துவதற்கு ஒரு தேனீர் கடையோ, குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பால்கூட வாங்கமுடியாத நிலையில் காரைக்குடி பேருந்து நிலையம் இருக்கிறது. அவ்வாறு பால் கிடைக்காமல் அவதியுறும் தாய்மார்களின் நிலையினையும், முதியோர்களையும் தினம்தோறும் இங்கு பார்க்கலாம்.

எனவே இனியும் தாமதிக்காமல், காரைக்குடி பேருந்து நிலையத்தில், இதர நகரங்களைப் போன்று, இரவு நேரத்திலும் கடைகள் திறந்திருக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்கின்றது அந்த புகார் மனு. மாவட்டக்காவல்துறையும் பாதுகாப்பினைக் காரணம் காட்டி திறக்க அனுமதி மறுப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT