ADVERTISEMENT

நீட் ஆள்மாறாட்டம்... உதித்சூர்யா, தந்தை வெங்கடேசன் நீதிமன்றத்தில் ஆஜர்!

08:43 PM Sep 26, 2019 | kalaimohan

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில் மாணவர் உதித்சூர்யா மற்றும் அவர் தந்தையை வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்ததாக உதித்சூர்யா என்ற மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த உதித்சூர்யாவை இரண்டு முறை நீட் தேர்வு எழுத வைத்தும் தோல்வியே கிடைத்ததால் மருத்துவர் கனவு பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதனையடுத்து இந்த ஆள்மாறட்டத்தை செயல்படுத்தியது எவ்வாறு, யாரெல்லாம் இதற்கு துணைபுரிந்தது என்பது குறித்த விசாரணையில் மும்பையிலுள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக வெங்கடேசன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தற்போது மும்பை விரைந்துள்ள சிபிசிஐடி போலீசார் அந்த நீட் பயிற்சி மையத்தையும், உதிர்த்சூர்யாவிற்கு பதிலாக நீட் தேர்வு எழுதிய நபரையும் விசாரணை செய்து கைது முடிவெடுத்துள்ளனர்.


இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். ஆள்மாறாட்டம் செய்த நிலையில் வெங்கடேசன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆள்மாறாட்டம், கூட்டுசதி, போலியான ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் அக் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். உதித்சூர்யா அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகியோர் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT