ADVERTISEMENT

10,300 புள்ளிகளை நோக்கி நிப்டி! காளையின் ஆதிக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் உற்சாகம்!! இன்று இப்படித்தான்...

10:15 AM Jun 22, 2020 | rajavel

ADVERTISEMENT


தேசிய பங்குச்சந்தையான நிப்டி, தொடர்ந்து இரண்டாம் நாளாகக் கடந்த வெள்ளியன்றும் ஏற்றத்தில் இருந்தது, முதலீட்டாளர்களிடைய புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் நிப்டி 10,244 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இந்த ஏற்றம், அடுத்து 10,338 முதல் 10,550 புள்ளிகள் வரையிலும் உயரவும் வாய்ப்புகள் உள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

''கடந்த சில வாரங்களில் இண்டெக்ஸில் ஏற்பட்ட இழப்புகளைக் காட்டிலும், இப்போது வர்த்தகம் படிப்படியாக எழுச்சி கண்டிருக்கிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியைப் பொருத்தவரை இண்டெக்ஸ் 10,100 முதல் 10,500 புள்ளிகள் வரை உயர்வு என்பது முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும்,'' என்கிறார் ஜிமீத் மோடி. இவர் சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆய்வாளர்.

ஷேர்கான் பங்குத்தரகு நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் கவுரவ் ரத்னாபர்கி, ''வாராந்திர அட்டவணை கணிப்பின்படி, கடந்த ஒரு வாரமாகவே நிப்டியின் இண்டெக்ஸ் நன்றாகவே மீட்சி அடைந்துள்ளது. திங்களன்றே (ஜூன் 22) நிப்டியில் 10,328 புள்ளிகளைக் கடந்தும் வர்த்தகம் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை,'' என்கிறார்.

அமெரிக்காவில் தடுமாற்றம்:

கடந்த வாரம் வெள்ளியன்று, காலையில் அமெரிக்க பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கினாலும், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அலை குறித்த செய்திகளால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. டவ் மற்றும் நாஸ்டாக் 0.5 முதல் 0.8 சதவீதம் வரை சரிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் எழுச்சி:

அமெரிக்க சந்தைகள் வீழ்ச்சி கண்டபோதும், சற்றே முரணாக ஐரோப்பிய பங்குச்சந்தைகள் கடந்த வெள்ளியன்று ஓரளவு எழுச்சி கண்டிருந்தன. லண்டனின் எப்டிஎஸ்இ, பிரான்சின் சிஏசி, ஜெர்மனியின் டிஏஎக்ஸ் ஆகிய பங்குச்சந்தைகள் இண்டெக்ஸ் 1 முதல் 1.3 சதவீதம் வரை உயர்ந்தன.

10,300 புள்ளிகளைக் கடக்கும்!:

கரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும், இந்தியாவில் பல நிறுவனங்களுக்கு ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகள் ஓரளவு நேர்மறை வளர்ச்சி அடைந்திருப்பதால் நிப்டியில் வரும் காலங்களில் பெரிய அளவில் வீழ்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (ஜூன் 22) நிப்டி இண்டெக்ஸ் 10,338 புள்ளிகளைக் கடக்கலாம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். சந்தையில் நிலையற்ற தன்மை காணப்பட்டாலும்கூட நிப்டி 9,900 புள்ளிகளுக்குக் கீழே செல்லாது என்கிறார்கள். ஒருவேளை, 10,500 புள்ளிகளைக் கடந்துவிட்டால், நிப்டியின் அடுத்த பாய்ச்சல் 11,000 புள்ளிகளாகத்தான் இருக்கும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆதாயம் அளிக்கும் பங்குகள்:

கடந்த வாரத்தின் இறுதியில் சில குறிப்பிட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு ஆதாயம் அளித்தன. 52 வார உச்ச விலையைக் கடந்தும் வர்த்தகம் ஆனது. அதனால் அவை மேலும் விலை உயரக்கூடும் என்ற சென்டிமென்ட் முதலீட்டாளர்களிடம் உள்ளது.

அதன்படி, ஜிஎம்ஆர் இன்ப்ரா, டிஎல்எப், ஜெய் கார்ப், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பிரமல் என்டர்பிரைசஸ், ரெயில் விகாஸ் நிகாம், ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், ஜம்ப் நெட்வொர்க்ஸ், மாருதி சுசூகி இண்டியா, ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி, சுவான் பார்சூட்டிகல்ஸ், இன்பிபீம் அவென்யூஸ், சுவான் லைப் சயின்சஸ், ஏபிபி இண்டியா, கஜாரியா செராமிக்ஸ், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், பிலாடெக்ஸ் இண்டியா, எஸ்ஜேவிஎன், பிர்லா கார்ப்பரேஷன், யுபிளெக்ஸ், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், ரைட்ஸ், டிரெண்ட், என்ஐஐடி, பில்டாலிகா லைப் ஸ்டைல்ஸ், எஸ்ஸால் புரோபேக் ஆகிய பங்குகள் இந்த வாரமும் ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதிக ஆர்வம் காட்டும் பங்குகள்:

முதலீட்டாளர்களிடையே பின்வரும் பங்குகளை வாங்கிக் குவிப்பதில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.

சுவான் பார்மா, ஈஐடி பார்ரி, ஆர்ஐஎல், லாரஸ் லேப்ஸ் மற்றும் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை நீண்டகால முதலீட்டு அடிப்படையில் வாங்கிப் போடுவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இப்பங்குகள் கடந்த 52 வார உச்ச விலையைக் கடந்தும் வர்த்தகம் ஆகி வருகின்றன என்பதும் கவனத்தில் கொண்டுள்ளனர்.

அதேநேரம், கடந்த 52 வார காலத்தில் குறைந்தபட்ச விலையைத் தொட்டுள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கண்ட்வாலா செக்யூரிட்டீஸ், பி.சி. பவர் கன்ட்ரோல்ஸ் ஆகிய பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றுத் தள்ளுகின்றனர்.

காளையின் ஆதிக்கம்:


ஒட்டுமொத்த அளவில், நிப்டி நிலவரம் இந்த வாரமும் காளையின் ஆதிக்கத்தில்தான் இருக்கும் என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள். கடந்த வெள்ளியன்று, பிஎஸ்இ சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 500 நிறுவனங்களில் 334 பங்குகள் கணிசமான ஆதாயம் அளித்தன. இதுவும் முதலீட்டாளர்களின் உற்சாகத்திற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT