
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், 14- ஆவது தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், இயற்கை வேளாண்வழியில் நஞ்சில்லா, உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், "கிரியேட்" நமது நெல்லைக் காப்போம் இயக்கம் சார்பாக, தொடர்ந்து 14 - ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் 200 விவசாயிகளுக்கு, "மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவணி, இலுப்பை பூ சம்பா, சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி உள்ளிட்ட பத்து விதமான, நெல் ரகங்களை இலவசமாக இரண்டு கிலோ வீதமானவிதை நெல், விவசாயிகளுக்கு வழங்கபட்டது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை, விவசாயிகளின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தபட்டு அவற்றின் பியிரிடும் காலங்களும் மகசூல் பற்றிய கருத்துதுரைகளும்வழங்கப்பட்டது.
இந்த விழாவில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு தலைமைப் பொது மேலாளர் மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் மணிகளை வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)