ADVERTISEMENT

தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை மாநாடு; புறக்கணித்த தமிழ்நாடு!

12:18 PM Jun 01, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் கல்வி அமைச்சர்கள் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநில அமைச்சர்களும், துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் புதிய கல்விக் கொள்கையை நாடு முழுக்க அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர். மேலும், துறைச் செயலாளர்களும் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதம் வந்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தக்கூடிய நிலை புதிய கல்வி கொள்கையில் இருக்கிறது இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இடம்பெற்றிருக்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குஜராத்தில் நடைபெறும் 2 நாள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT