ADVERTISEMENT

பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

09:02 AM Jan 26, 2020 | santhoshb@nakk…

இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

ADVERTISEMENT


அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொண்டனர்.

ADVERTISEMENT


தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அலங்காரக ஊர்திகளின் அணி வகுப்பு இடம் பெற்றது. விழாவில் காவலர் பதக்கம், அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான விருது, வேளாண் துறையின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.


அதன்படி காவல் ஆய்வாளர் பூங்கோதை உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார். மேலும் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல் நாகை தீயணைப்புத்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. நாகையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிவதர்ஷினி என்ற 2 வயது குழந்தையை உயிருடன் மீட்டதால் விருது.


மேலும் ஏகேஸ், பிரிஸ்டன் பிராங்கிளின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம் குமார், திருவள்ளூரை சேர்ந்த தனலட்சுமி, வினோதினி, தஞ்சை தம்பதி இந்திரா காந்தி, பழனியப்பன் ஆகியோருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.

திருச்சியில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீருக்கு மத நல்லிணக்க விருதை முதல்வர் வழங்கினார். பதக்கம், விருது பெற்றவர்களுடன் முதல்வர் பழனிசாமி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT