ADVERTISEMENT

கொட்டும் மழையில் குடையுடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

06:04 PM Dec 22, 2018 | kalidoss

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேர் வீதியுலாவின் போது பலத்த மழை பெய்தது. இதனால் நான்கு வீதிகளிலும் எந்த இடத்திலும் தேர் நிற்காமல் தேர் புறப்பட்ட இடத்தை ஒரு மணி நேரத்தில் அடைந்தது. நான்கு வீதிகளில் உள்ள கட்டளைதாரர்கள் தேரில் சாமி வரும்போது மண்டகப்படி பூஜைகளை செய்வது வழக்கம். கனமழையின் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனைதொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் சாமியை இறக்கி வைத்து அந்த இடத்தில் மண்டகபடி நிகழ்ச்சிகளை செய்தனர்.

ADVERTISEMENT

12 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோதும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பும் தேர் உறுதி தன்மை சரியில்லையென்று இதேபோல் தேரை எங்கும் நிறுத்தாமல் கோயிலுக்கு் கொண்டு செல்லப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டும் சிதம்பரத்தில் பலத்த மழை காரணமாக நடராஜனும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட ஐந்து தேர்கள் எங்கும் நிற்காமல் நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதனைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆயிரம்கால் மண்டபத்தில் மகா அபிஷேகபூஜை நடைபெறும். பின்னர் திருவாபாரணம் அலங்காரத்தில் தரிசனம் நிகழ்ச்சி பகல் 1 மணியளவில் நடைபெறும். இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT