ADVERTISEMENT

'நடராஜர் கோவிலுக்கு தனிச்சட்டம் வேண்டும்...' -சிபிஎம் கையெழுத்து இயக்கம்!

05:49 PM Jun 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிப்பதில்லை என்பது குறித்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கடிதங்களாக இந்து சமய அறநிலைத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கோவில் கனகசபையில் ஏறி வழிபட அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பேரில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் கணக்கு விபரம், அறக்கட்டளை குறித்த விவரம் கேட்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கோவிலுக்கு வந்தனர். இவர்களைக் கோவில் தீட்சிதர்கள் கணக்கு கேட்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என திருப்பி அனுப்பி விட்டனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நடராஜர் கோவில் பாதுகாப்பது குறித்து வரும் 20, 21 தேதிகளில் இந்துசமய அறநிலையத்துறை தபால் மூலமாகவோ, நேரடியாக ஆலோசனைகளை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையொட்டி நடராஜர் கோவிலைப் பாதுகாக்க வேண்டியும், நடராஜர் கோவிலுக்குத் தனிச்சட்டம் இயற்றி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகரம், கொத்தங்குடி, அண்ணாமலை நகர், மண் ரோடு, தெற்கிருப்பு உள்ளிட்ட 30 மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ஜெயசித்ரா, நகர் குழு உறுப்பினர்கள், வார்டு கிளை செயலாளர்கள் கட்சியினர் கலந்துகொண்டு வீடு வீடாகச் சென்று நடராஜர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை பொதுமக்களுக்கு விளக்கிக்கூறி கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் வரும் 20, 21-ல் கடலூரில் நடராஜர் கோவில் குறித்து நடைபெறும் ஆலோசனை கேட்பு கூட்டத்தில் அறநிலையத்துறை அலுவலர்களிடம் அளிக்க உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT