சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் குறுவை சாகுபடிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தண்ணீரைத் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் மணி வாசகம், மாவட்டச் செயலாளர், மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய வட்ட நிர்வாகிகள் என எழுவதற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.