ADVERTISEMENT

இந்தி திணிப்பை அரசு எதிர்க்கும் – முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

12:18 PM Jun 03, 2019 | kalaimohan

தாய்மொழி, ஆங்கிலம் அல்லாது மூன்றாவது மொழியாக நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக்கொள்கையை வகுக்கும் குழு அறிவுறுத்தி தனது வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தமிழ், ஆங்கிலம் அல்லாது மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்கும் இம்முயற்சிக்குதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ADVERTISEMENT



இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ADVERTISEMENT



“புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையை கடைபிடித்து வருகிறோம். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு மொழிகளை மக்கள் பேசி வருகின்றனர். மற்ற மொழிகளை விரும்பியவர்கள் படிக்கலாம். அது கட்டாயம் கிடையாது.



கடந்த 1965–ல் இந்தி திணிப்பின்போது தமிழகம், புதுச்சேரி பற்றி எரிந்தது. அதனால் எந்த காலத்திலும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டோம். விரும்பியவர்கள் வேண்டுமானால் இந்தியை படிக்கலாம். அதையும் மீறி இந்தி திணிப்பு வந்தால் எதிர்ப்போம் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT