Advertisment

நாங்குநேரி சம்பவம்; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 

Nanguneri Incident; Submission of inquiry report

Advertisment

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த வாரம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். மேலும் மாணவர் சின்னத்துரையின் தாயாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கைதான 7 பேர் மீதும் 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சின்னராசு விசாரணை நடத்தி வந்த நிலையில், இது குறித்த முதற்கட்ட அறிக்கையை பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பள்ளி மாணவருக்கு நடைபெற்ற சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரையும் விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

“நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

நாங்குநேரி சம்பவம்; ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

Tirunelveli nanguneri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe