ADVERTISEMENT

 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' - பெயர்ப்பலகை திறப்பு 

11:27 AM May 03, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக அவர் வசித்துவந்த சென்னை பத்மாவதி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த ஞாயிறன்று வெளியிட்டது. அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 'சின்னக் ​கலைவாணர் விவேக் சாலை'யின் பெயர்ப்பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் நடிகர் விவேக்கின் குடும்பத்தாரும் உடனிருந்தனர். அதன் பின்னர், நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT