ADVERTISEMENT

அடிக்கடி கான்கிரீட்டில் புதையும் அடி பம்புகள்! 

05:35 PM Aug 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் பொழுது பயன்பாட்டிலிருந்த அடி பம்பு பயன்படுத்த முடியாத வகையில் அதனருகில் சுவர் எழுப்பப்பட்டது சர்ச்சையை எழுப்பியது. இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த சுவரை அகற்றிவிட்டு போர்வெல்லை மூடி விட்டு சென்றனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்பே வேலூர் மாநகராட்சியில் இருசக்கர வாகனத்தின் டயர் சாலையில் புதையும்படி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.

இந்நிலையில் அதேபோல் ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நிகழ்ந்துள்ளது. ராசிபுரம் பட்டணம் முனியப்பன் பாளையத்தில் உள்ள இந்திரா நகர் என்ற பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. அப்பொழுது அந்த பகுதியிலிருந்த அடி பம்பு புதையும்படி கான்க்ரீட் போடப்பட்டது. ஒப்பந்ததாரரின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என அந்தப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT