ADVERTISEMENT

’வேட்புமனு தமிழில் இல்லை ஆங்கிலத்தில்தான் உள்ளது’-விவசாயிகளை வெறுப்பேற்றிய மயிலாடுதுறை நாடாளுமன்ற அதிகாரிகள்

03:32 PM Mar 22, 2019 | selvakumar

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததுமே, டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும், நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 300 வேட்பாளர்களை நிறுத்தப்போகிறோம், தேர்தலை போராட்டக்களமாக மாற்றி ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்போகிறோம் என்று கூறியிருந்தனர். அதனை நமது நக்கீரன் இணைய தளத்திலும் பதிவிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கிவரும் நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை பெறுவதற்கு மயிலாடுதுறை ஆர்,டி,ஓ அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சில விண்ணப்பங்கள் மட்டுமே தமிழில் இருப்பதாகவும், அதிக அளவில் விண்ணப்பங்கள் வேண்டுமானால் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வாங்க மறுத்து, " எங்களுக்கு எதிராக சூது செய்கிறீர்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். " என்ற கோஷத்தை எழுப்பினர்.

அவர்களிடம் தேர்தல் அலுவலர்கள், தமிழில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வேண்டுமானால், நாகை ஆட்சியரிடம் கேளுங்கள்," எனகூறி வெளியேற்றினர்.

இதுகுறித்து நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறுகையில்," மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான அதிகாரியும், வேட்பு மனுக்களும் நாகப்பட்டினத்தில் இருக்கிறது என்று கூறுவதில் இருந்தே இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என்பது புலப்படுகிறது. நாகை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக இருக்கிறார். அவர் மயிலாடுதுறை பகுதிக்கு வராமல் நாகையில் இருந்து கொண்டு தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. மயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கியிருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.



இந்தநிலையில் அந்த அமைப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ராஜா ஆகிய இருவரும் வேட்புமனுவை பெற்றிருந்தார் அவர்கள் இருவரும் மற்றும் நிலம்நீர் அமைப்பினரும் கழுத்தில் காலி மது பாட்டில்களுடன் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை உதவி தேர்தல் அலுவலர் கண்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தவர்கள், " மீத்தேன் திட்டத்தை எதிர்த்து வந்த நேரத்தில், ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டது. ஹைட்ரோகார்பன் எடுத்தால் விவசாய நிலம் பாழ்பட்டு பாலைவனம் மாறும், மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிலமீட்பு இயக்கத்தினர் தற்போது இரண்டு பேர் தாக்கல் செய்துள்ளோம், விரைவில் மற்றவர்கள் தாக்கல் செய்வோம்" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT