ADVERTISEMENT

நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

07:15 AM Dec 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்திற்கு 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. நாகை மாவட்ட மீனவர்கள் விசைப்படகு, நாட்டு படகு மூலம் கடலுக்கு சென்றிருந்தால் உடனே கரைக்கு திரும்ப மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT